Skip to main content

Posts

Showing posts from July, 2015

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன? சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை. அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க. பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம். யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்....

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...!

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுது ளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது... அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே... * 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது... * Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)... * chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று... * 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது... * மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது... * தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள...

வழுக்கை விழுவது ஏன்?

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.   முடியின் வளர்ச்சி முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் ம...

நல்ல பாம்பு கடி - க்கு சித்த மருந்து

"நல்ல பாம்பு கடி" க்கு சித்த மருந்து பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழ மொழி. இது ஏதோ சொல்லிவிட்டு போனது மட்டுமல்ல. ஒரு கூட்டத்தில் பாம்பு புகுந்து விட்டது என்று சொன்னாலே அந்த கூட்டமே கலைத்து விடும் அளவுக்கு "பாம்பு" என்ற சொல்லுக்கு சக்தி உண்டு. உலகில் சில வகை பாம்புகள் மட்டுமே விசம் உடையவை. பெரும்பாலும் விசம் அற்றவை. இங்கு நாம் பார்க்க போவது விசமுள்ள நல்ல பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது பிறகு எப்படி மருந்து கொடுப்பது? அதற்கு முன்னர் சில அடிப்படை விடயங்களை பார்ப்போம். பாம்பின் விசத்தை எடுத்து வீரியம் குறைத்து குதிரை, ஆடு செம்மறியாடு, முயல் போன்றவைகளுக்கு செலுத்தி அதில் இருந்து எடுக்கப் படுகிறது விசமுறிப்பான். பாம்பு கடிக்கு தற்போது இது தான் மருந்து. இதே மருந்தை பாம்பு கடிக்காமல் இத மருந்தை நம் உடலில் செலுத்தினால் இறப்பு ஏற்படவும் கட்டாயம் வாய்ப்பு உண்டு. கடிவாயில் வரிசையாக பற்கள் காணப்பட்டால் அது நல்ல பாம்பு கடி அல்ல என்று முடிவுக்கு வரலாம். கடிவாயில் இரண்டு பற்கள் மட்டும் பதிந்து கடிவாய் சற்று வீங்கி கடுமையான ...