Skip to main content

Posts

Showing posts from June, 2015

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்?

இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கிறார். அதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதியில் உணர்விழந்துபோன நிலையில் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துவிட ஆபத்து அதிகமானது. அவரது கால்களின் கீழ்ப்பகுதி பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் அதை அவசர அவசரமாக வெட்டி எடுக்க வேணிய அளவுக்கு நிலைமை விபரீதமானது. அவர் ...

ருத்ராட்சை

..... ருத்ராட்சை பழுப்பு நிற மணிகளான ருத்ராட்சைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. . ருத்ராக்ஷா என்பது 'ருத்ரா' (சிவன் என்று பொருள்) மற்றும் 'அக்ஷா' (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது. . இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படும். இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும். . ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்...

நாமம் போடுதல் என்றால் என்ன‌?

நாமம் போடுதல் என்றால் என்ன‌? வராக அவதாரத்தின் போது, மகாவிஷ்ணு வெள்ளை வெளேரென்று உள்ள தன் பற்களால் உலகையே தூக்கி நிறுத்தினார். அவருடைய பற்கள் பட்ட இடங்களில் `ச்வேத மிருத்திகை’ எனும் வெள்ளை மண்கட்டிகள் உருவானதாம். அதைப் போன்ற வெள்ளை மண்ணை, `திருமண்’ என்று வைணவர்கள் நாமமாகப் போட்டுக் கொள்கிறார்கள். . வைணவர், சைவர், மாத்வர் அனைவருமே நெற்றியில் மட்டுமின்றி, மார்பு, வயிறு, புஜங்கள், மணிக்கட்டு முதலிய இடங்களில், நாமமோ, விபூதியோ, சந்தனமோ, இட்டுக் கொள்வார்கள். கேசவ, நாராயண, மாதவ, கோவி ந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம், வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர, ஆகிய 12 பெயர்களும் திருமாலுக்கு விசேஷமானவை. . பெருமாளின் இந்த 12 பெயர்களை, அதாவது நாமாக்களை கூறிக்கொண்டே, வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் திருமண் இட்டு கொள்வார்கள். நாமாக்களை சொல்லி அணிவதால், `நாமம் போடுதல்’ என்று ஆயிற்று.

பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது.

பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர். சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. . கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை. . நாளிடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது. . நீண்ட நேரம் கால் மீது கால் வைத்து உட்காரும் பெண்கள் இனிமேலாவது கவனமாக இருங்கள்...!!!

தமிழ்எழுத்து பிறந்த கதைஅறிவோமா?

அ , ஆ , இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ , ஒ , ஓ , ஒள ( உயிர்எழுத்துக்கள் ) நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி . உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றைமட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர்எழுத்துக்கள் . . க் , ங் , ச் , ஞ்ட் , ண் , த் , ந் , ப் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன் ( மெய்எழுத்துக்கள் )   நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும் . இவ்வொலிகளை ஏற்படுத்தும் போது காற்றின் பங்கை விட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள்  என்று பெயர் சூட்டப்பட்டது   . உயிர்எழுத்துக்கள் : 12 மெய்எழுத்துக்கள் : 18 உயிர்மெய்எழுத்துக்கள் : 216 ஆய்தஎழுத்து : 1 தமிழ்எழுத்துக்கள்மொத்தம் : 247   நம் மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம் . க , ச , ட , த , ப , ற – ஆறும் வல்லினம் . ங , ஞ , ண , ந , ம , ன – ஆறும் மெல்லினம் . ய , ர , ல , வ , ழ , ள – ஆறும் இடையினம் . . உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ ( படர்க்கை ), இ ( தன்னிலை ), உ ( முன்னி...

விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?

அக்காலத்தில் மின்சாரம் இல்லை. சிறு அகல்விளக்கு , வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது. அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறுபொருட்கள்  (விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து , கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம். இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர். .....

திருமணத்தில் 10 பொருத்தம் ஏன் பொருந்தனும்...?

திருமணத்தில் 10 பொருத்தம் ஏன் பொருந்தனும்... ? அது என்னவெல்லாம்.. ? திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும் , 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால் , அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். அதென்ன பத்து பொருத்தம் ? 1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண் , பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது. 2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள் , கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும் , பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம். 4. ...

காதலைப் பற்றி இவர்கள் சொல்லும் கருத்து :

* பரோட்டா மாஸ்ட்டர் : காதல் என்பது பரோட்டா மாதிரி.ரெண்டு பக்கமும் நல்லா வேகணும்.அப்பதான் ருசியா இருக்கும். * போலீஸ்காரர் : லவ்வுங்கிறது மாமூல் மாதிரி.அதிகமா கிடைச்சா சந்தோசம் , கம்மியா கிடைச்சா வருத்தம்.இதாங்க லவ்வு. * ஆட்டோகாரர் : காதல்னா ரெகுலர் சவாரி மாதிரி இருக்கணும்பா.இப்படி லோக்கல் சவாரி மாதிரி என்னிக்காவது வரக்கூடது பா. * அரசியல்வாதி : காதல்னா , மத்திய அரசு மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கணும்.மாநி ல அரசு மாதிரி பொறுப்பில்லாம இருக்கக்கூடாது. * பைலட் : காதல் ஒரு Run Way  மாதிரி ஒரே லெவல்ல இருக்கணும்.கொஞ்சம் முன்ன பின்ன இருந்துச்சுனா Take-Off ஆவுறது கஷ்ட்டம். * டாக்டர் : காதல் என்பது Anti Biotic Medicine (ஆன்டி பயோட்டிக் மெடிசின்) மாதிரி.வருமுன் காப்பதே சிறந்தது.    * பத்திரிக்கையாளரர் : காதல் என்பது "கண்ணித்தீவு" தொடர் மாதிரி.இதுவரைக்கும் முடிவே வரலை. * பாய்ஸ் :    சார் , லவ்வுங்கிறது வேற மாதிரியான Feelings. அத சொல்ல முடியாது , அனுபவிக்க தான் முடியும். * கேல்ஸ் : காதல்னா அன்பு.அன்புனா காதல். நண்பர்களே காதலை பற்றி ...

மருதோன்றி/ மருதாணி பூசுவது ஏன்?

கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளை கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்க படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன மேலும் மனக்குழப்பத்தை தவிர்கின்றன. இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும். மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள். இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர். மருதாணியின் பயன்கள் : மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர , உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும். சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து வ...

மண்பாண்டத்தின் மகிமை!

மண்பாண்டத்தின் மகிமை! “மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு ...

துளசியின் சிறப்பும், பெருமையும்

துளசியின் சிறப்பும், பெருமையும் . எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது. 1) துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும். 2) துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.   3) துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.   4) மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.   5) வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது   6) துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி.   7) பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.   8) அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.   9) துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.   1...

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

நம் முன்னோர்கள் விபூதியை பட்டையாக நெற்றியில் பூசுவர். இந்த விபூதி பெரும்பாலும் பசுவின் சாணம் மற்றும் சில மரங்களை எரித்து அதில் இருந்து தயாரித்தனர். . பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத்தான் போகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போ கிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். . மேலும் இந்த சாம்பல் பாக்டீரியவை கொல்லும் திறன் கொண்டது. எனவே காய்ச்சல் அல்லது உடல் நலகுறைவின் பொழுது பயன்படுத்தபடுகிறது. விஞ்ஞான பூர்வமாக அது சைனஸ் பிரச்சினைகள் மற்றும் மற்ற பாக்டீரியல் நோய்களை தடுக்கிறது. இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது. . மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கியப்பாகம். அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் ...