Skip to main content

ருத்ராட்சை

..... ருத்ராட்சை


பழுப்பு நிற மணிகளான ருத்ராட்சைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது.
.
ருத்ராக்ஷா என்பது 'ருத்ரா' (சிவன் என்று பொருள்) மற்றும் 'அக்ஷா' (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது.
.
இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படும். இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும்.
.
ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள்.
.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஓன்று சேர்ந்த மாலையை "கண்டிகை'' என்பார்கள். சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது.
.
சிவனை வணங்கும் போது, அவருக்காக பூஜை, தியானம், ஜெபம் செய்யும் போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம். தூங்கும் போது, உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு - இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
.
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும். ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது. மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். போகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும். ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.
.
ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது. ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
.
1) ..... ஒருமுக ருத்ராட்சை
ஒரு முக ருத்ராட்சை என்பது சிவபெருமானின் மிக நெருங்கிய வடிவமாக பார்க்கப்படுகிறது. “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும். இந்த ருத்ராட்சையை அணியும் போது, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வகை ருத்ராட்சையை அணிபவருக்கு அனைத்து வகையான சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகும்.
.
2)..... இரண்டு முக ருத்ராட்சை
இரண்டு முக ருத்ராட்சை அனைத்து வகையான ஆசைகளையும் நிறைவேற்றும். இதனை அணியும் போது, “ஓம் நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
.
3) ..... மூன்று முக ருத்ராட்சை
அறிவை நாடுபவர்களுக்கானது இந்த மூன்று முக ருத்ராட்சை. இதனை அணியும் போது, “ஓம் கிளீன் நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
.
4) ..... நான்கு முக ருத்ராட்சை
நான்கு முக ருத்ராட்சை என்பது பிரம்மனின் வடிவத்தை குறிக்கும். இவ்வகை ருத்ராட்சை ஒரு மனிதனுக்கு தர்மம், அர்தா, காமம் மற்றும் மோட்சத்தை அளிக்கும். “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
.
5) ..... ஐந்து முக ருத்ராட்சை
வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தடங்களை நீக்க ஐந்து முக ருத்ராட்சை உதவி புரியும். “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
.
6) ..... ஆறு முக ருத்ராட்சை
முருக பெருமானை குறிக்கிறது இந்த ருட்ராட்சை. இந்த ருத்ராட்சையை வலது கையில் கட்டிக் கொண்டால், பிரம்மஹத்தி பாவங்களை போக்கலாம். “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

7) ..... ஏழு முக ருத்ராட்சை
அளவுக்கு அதிகமான நிதி நஷ்டம் அல்லது போதிய அளவில் சம்பாதிக்க முடியாதவர்கள் இந்த ஏழு முக ருத்ராட்சையை அணியலாம். “ஓம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

8) ..... எட்டு முக ருத்ராட்சை
பைரவரை குறிக்கிறது எட்டு வகை ருத்ராட்சை. இவ்வகை ருத்ராட்சை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் துரதிஷ்டவசமான விபத்துகளில் இருந்தும் காக்கும். “ஓம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
.
9) ..... ஒன்பது முக ருத்ராட்சை
ஒன்பது வடிவிலான சக்தியை குறிக்கிறது இந்த ருத்ராட்சை. இவ்வகை ருத்ராட்சையை அணிபவர்களுக்கு அனைத்து விதமான சந்தோஷங்களும் வளமையும் வந்து சேரும். “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
10) ..... பத்து முக ருத்ராட்சை
10 முக ருத்ராட்சை விஷ்ணு பகவானை குறிக்கும். இந்த ருத்ராட்சையை அணிபவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் கிட்டும். “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
11) ..... பதினொன்று முக ருத்ராட்சை
வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டிட பதினொன்று முக ருத்ராட்சையை அணியவும். “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

12) ..... பனிரெண்டு முக ருத்ராட்சை
சந்தோஷத்திற்கும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் பனிரெண்டு முக ருத்ராட்சையை அணிய வேண்டும். “ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
.
13) ..... பதிமூன்று முக ருத்ராட்சை
விஷ்வதேவர்களை குறிக்கிறது பதிமூன்று முக ருத்ராட்சை. அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது இந்த ருத்ராட்சை. “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.
.
14) ..... பதினான்கு முக ருத்ராட்சை
பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். உங்கள் பாவங்கள் நீங்க இதனை அணியலாம். “ஓம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...