Skip to main content

திருமணத்தில் 10 பொருத்தம் ஏன் பொருந்தனும்...?

திருமணத்தில் 10 பொருத்தம் ஏன் பொருந்தனும்...?

அது என்னவெல்லாம்.. ?

திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம்
இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள்
இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?

1. தினப் பொருத்தம் :

இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் :

இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் :

திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்
.
5. யோனிப் பொருத்தம் :

இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம்
கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
 
7. ராசி அதிபதி பொருத்தம் :

குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் :

திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது. இந்த பத்து பொருத்தங்கள்
எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி,ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம்
இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர்
கண்டு கொள்வதே இல்லை. 
 
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான்  திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட
சாஸ்திரமே வலியுறுத்துகிறது.........................

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...