* வாழ் + ஜ = வாழை
என்பதற்கும் வாழ் +கை = வாழ்க்கை என்பதற்கும் நிரம்பத் தொடர்புண்டு. வாழை நட்ட
இடத்தில் ஒன்று பரவலாகத் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும்.
* பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடல் பகுதியிலுள்ள அனைத்தையும் ஈகம் செய்யும். தன் உயிர் இழந்த தண்டு, நார், காய், கனி என்று உலகுக்கு வழங்கும் வாழை போன்று தென்னையும் ஈகையின் வெளிப்பாடாகும்.
* இவ்விரு மரங்களையும் கற்பகத்தரு என்று தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவார்கள். மனித வாழ்க்கையும், உற்றவர்களுக்கும், உலகத்தாருக்கும் முறையாகப் பயன்தருகின்ற அறவாழ்க்கையாக அமைய வேண்டுமென்று தமிழ்ச் சான்றோர்கள் எண்ணினார்கள்.
* இன்று வாழையும் தென்னையும் கட்டுவது ஒரு சடங்கு போல பலருக்குச் செய்யப்படுகிறதே தவிர, அதன் பண்பாட்டு நோக்கம் பலருக்குத் தெரியவில்லை. வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காகச் சுபகாரியங்களின் போது, குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகவும் தான் வாழை மரம் கட்டுகிறோம்.
* அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு. வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன், அகலமாகவும் இருக்கும்.
* உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்தக் கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிகட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் தருகிறது.
* வாழைப்பழம் எல்லாக் காலங்களிலும், எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக் கூடியாது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவன் வாழையிலும் குடியிருப்பதாக ஜதீகம். அதனால் தான் மும்மூர்த்திகளையும் சூட்சுமமாகக் குறிக்கும் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

Comments
Post a Comment