Skip to main content

கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன?

கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன?

இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள்?

இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?

ஆஃப்ரிக்கா:-

ஆ ஃப்ரிக்காவிற்கு எதனால் அந்தப்பெயர்?
ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில்
வசித்தனர். ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற அர்த்தத்தில்
ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது. ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக் கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). தூசிஎன்ற அர்த்தம். தூசிகளின் நிலம்என்று இதற்கு அர்த்தம்.ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது ஞாபகம் இருக்கிறதா?

அண்டார்டிகா:-

அண்டார்டிகா என்பதும் கிரேக்க வார்த்தை தான். இதன்
பொருள் வடக்கிற்கு எதிரானது’.பூமியின் தெற்குப் பகுதி நுனியில்தானே அண்டார்டிகா இருக்கிறது.எனவே இது பொருத்தமானதுதான்.

ஆஸ்திரேலியா:-

ஆஸ்திரேலிஸ் என்றால் லத்தீன் மொழியில் தெற்கில் உள்ள தெரியாத பகுதிஎன்ற அர்த்தம். அக்கால ரோமானியர்களுக்கு ஆஸ்திரேலியாவை
அடைவதற்கான கடல் வழி இல்லை.எனவே இந்தப் பகுதியைப் பின்னர்தான் அடைந்தார்கள்.ஆஸ்திரேலியா என்று போகிற
போக்கில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுவே நிலைத்து விட்டது.

ஆசியா:-

ஆசியா என்பதும் கிரேக்க வார்த்தைதான். ஏஜியாஎன்ற வார்த்தையில் இருந்து கொஞ்சம் மாறிப்போன வார்த்தை இது. கி.மு. 440-ல் இருந்தே இந்தக் கண்டம் ஆசியா என்று அழைக்கப்படுகிறது. ஏஜியன் கடலின்
கிழக்குக் கரையில் இருந்த பகுதிகளை முன்பு ஆசியா என்று குறிப்பிட்டார்கள் பிறகு மொத்த கண்டத்திற்கும் அந்தப் பெயர் வந்துவிட்டது.

ஐரோப்பா:-

ஐரோப்பாவைக் குறிக்கும் யுரோப்என்ற வார்த்தை யுரோபா என்பதிலிருந்து வந்தது.கிரேக்கப் புராணத்தின்படி ஜீயஸ் என்பவர் பிற
கடவுளருக்கும், மனிதர்களுக்கும் தந்தையாகக் கருதப்படுகிறார். கிரீஸில் உள்ள மவுண்ட் ஒலிம்பஸ் என்ற மலையிலிருந்து இவர் ஆட்சி செய்கிறார். இவரின் காதலிக ளில் ஒருத்தியின் பெயர் யுரோப்பா.ஜீயஸ்
யுரோப்பாவை ஒரு வெள்ளை எருதின் வடிவத் தில் வந்து கவர்ந்து சென்றாராம். கிரேக்க ஓவியங்களில் வெள்ளை எருதின்மீது அமர்ந்திருக்கும் யுரோப்பாவின் உருவம் மிகப் பிரபலம்.

அமெரிக்கா:-

அமெரிக்கோ வெஸ்புகி என்பவரின் பெயரில்தான் அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது என்று பாடங்களில் படித்திருக்கிறோம். 1499-ல் இந்தப்
பகுதியை அடைந்தவர் வெஸ்புகி.இது ஆசியாவின் ஒரு பகுதி இல்லை என்பதையும், இது புதிய பகுதி என்பதையும் வெஸ்புகி கண்டறிந்து புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகம் எல்லா ஐரோப்பிய
மொழிகளிலும் வெளியானது. 1507-ல் ஜெர்மனியைச் சேர்ந்த
மார்ட்டின் வல்ட்ஸீமுல்வர் என்பவர் உலக வரைபடத்தை உருவாக்கியபோது அமெரிக்காவையும் அதில் இணைத்தார்.
கொலம்பஸின் பயணங்கள் பற்றி அவருக்குத் தெரியாததால், வெஸ்புகியின் பெயரின் முதல் பகுதியான அமெரிக்கா
என்பதையே பெயராக வைத்தார்....

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...