Skip to main content

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக்...???

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக்...???

விஷமாகிறதா உணவு....???.

தொலைதூரப் பயணங்களின் போது அரிதாக ஹோட்டல்
உணவுகளைப் பயன்படுத்திய வர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல்
உணவு அத்தியா வசியமாகிவிட்டது.சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள்.
கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும்
பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.

நல்ல பிளாஸ்டிக்?

நல்ல பிளாஸ்டிக்என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக
மோசமானது என்றே வகைப் படுத்த முடியும்.

ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில்
ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன
தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது. பொருளாதாரத்தில் வளமாக உள்ள,
சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால்
பிற மக்களின் நிலை இன்னும் மோசம். ஆகவே நாம் உபயோகப்படுத்தும்
பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கண்டெய்னர்களில் உள்ள எண்களைப்
பற்றி தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப அளவுடனும் எச்சரிக்கையாகவும்
பயன்படுத்தலாமே...!!

பிளாஸ்டிக் ரகசியம்...!!!

ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக்
தன்மையை விளக்குகிறது.

1 Polyethylene terephtalate (PETE orPET) –

தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.

2 Highdensity polyethylene (HDPE) -

பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.

3 Polyvinyl chloride (PVC)

உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.

4 Low density polyethylene (LDPE) -

மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்

5 Polypropylene –

தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.

6 Polystyrene/Styrofoam –

மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச் 7 எண், 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில்
போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது. குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 2, 4, 5
குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்
கூடியது - 1 மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 3, 6, 7.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...