Skip to main content

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழகஅரசால்ஏற்றுக்கொள்ளப்பட்டதமிழ்வாழ்த்துவாழ்த்துப்பாடலைஎழுதியவர்மனோன்மணியம்சுந்தரனார்என்பவராவார். இவர்எழுதியபுகழ்பெற்றநாடகநூலானமனோன்மணியம்நூலில்உள்ளதுதிப்பாடலின்ஒருபகுதிஇப்பாடலாகும்.
ஆரியம்போலதமிழ்உலகவழக்கழிந்துசிதையவில்லைஎன்றுகூறும்வரிகள்தள்ளப்பட்டுதமிழ்த்தாயைப்புகழும்வகையில்அமைந்தவரிகள்மட்டும்ஏற்கப்பட்டுள்ளன. இதை 1970ஆம்ஆண்டுதமிழகஅரசுஇப்பாடலைதமிழ்த்தாய்வாழ்த்தாகஅறிவித்தது.

"நீராருங்கடலுடுத்தநிலமடந்தைக்கெழிலொழுகும்
சீராரும்வதனமெனத்திகழ்பரதக்கண்டமிதில்
தெக்கணமும்அதிற்சிறந்ததிராவிடநல்திருநாடும்
தக்கசிறுபிறைநுதலும்தரித்தநறுந்திலகமுமே
அத்திலகவாசனைபோல்அனைத்துலகும்இன்பமுற
எத்திசையும்புகழ்மணக்கஇருந்தபெருந்தமிழணங்கே!
தமிழணங்கே!

உன்சீரிளமைத்திறம்வியந்து
செயல்மறந்துவாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"


இப்பாடலின்பொருள், நீர்நிறைந்தகடலெனும்ஆடையுடுத்தியநிலமெனும்பெண்ணுக்கு, அழகுமிளிரும்சிறப்புநிறைந்தமுகமாகதிகழ்கிறஇந்தியக்கண்டத்தில், தென்னாடும்அதில்சிறந்ததிராவிடர்களின்நல்லதிருநாடும், பொருத்தமானபிறைபோன்றநெற்றியாகவும், அதிலிட்டமணம்வீசும்திலகமாகவும்இருக்கின்றன. அந்ததிலகத்தில்இருந்துவரும்வாசனைபோல, அனைத்துலகமும்இன்பம்பெறும்வகையில்எல்லாத்திசையிலும்புகழ்மணக்கும்படிஇருக்கின்றபெருமைமிக்கதமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும்இளமையாகஇருக்கின்றஉன்சிறப்பானத்திறமையைவியந்துஎங்கள்செயல்களைமறந்துஉன்னைவாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இப்பாடல்சுந்தரனார்இயற்றியபாடலின்திருத்தமேயாகும்.

அவர்எழுதியமெய்ப்பாடல்கீழேகொடுக்கப்பட்டுள்ளது.


"நீராரும்கடலுடுத்தநிலமடந்தைக்கெழிலொழுகும்
சீராரும்வதனமெனத்திகழ்பரதக்கண்டமிதில்
தெக்கணமும்அதிற்சிறந்ததிராவிடநல்திருநாடும்
தக்கசிறுபிறைநுதலும்தரித்தநறும்திலகமுமே!
அத்திலகவாசனைபோல்அனைத்துலகும்இன்பமுற
எத்திசையும்புகழ்மணக்கஇருந்தபெரும்தமிழணங்கே!
பல்லுயிரும்பலவுலகும்படைத்தளித்துத்துடைக்கினுமோர்
எல்லையறுபரம்பொருள்முன்இருந்தபடிஇருப்பதுபோல்
கன்னடமுங்களிதெலுங்கும்கவின்மலையாளமும்துளுவும்
உன்னுதரத்தேயுதித்தேஒன்றுபலவாகிடினும்
ஆரியம்போல்உலகவழக்கழிந்தொழிந்துசிதையாவுன்

சீரிளமைத்திறம்வியந்துசெயன்மறந்துவாழ்த்துதுமே!"

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...