தமிழர்களுடைய வாழ்க்கை
முறை என்பது இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை
நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின்
மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு
சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம்
சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில்
தெளித்து வாசல் பெருக்கும்போது பிராண வாயு,
அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன்
நமக்கு கிடைக்கிறது.
மேலும் குனிந்து பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது.
இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி எல்லாம் வருகிறார்கள் என்று ஐதீகம் இருக்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்கள் வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு இருக்கிறது. அதிலும் அந்த மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது.
கோலம் போட சில விதிகள்
*************************************
* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.
* வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.
* கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.
* விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.
* இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.
* இடது கையால் கோலம் போடக்கூடாது.
* பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.
* கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.
* கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
* ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.
*சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.
*வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.
இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன, செய்யும் செயலை ஏன், எதற்காக என்று தெரிந்து செய்தால் நன்மை பயக்கும். இல்லையேல் கேலிக்கும் கூத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இவை நமக்கு நன்மை பயக்குமா? சிந்திப்போம்! செயல்படுவோம்...

Comments
Post a Comment