Skip to main content

நம் உடலுக்கும் காலஅட்டவணை

நம் உடலுக்கும் காலஅட்டவணை உண்டுஇதை நாம் முறையாகப் பின்பற்றினால்டாக்டரிடம் போக வேண்டியஅவசியமே இல்லை.
இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை -நுரையீரல் நேரம்.
இந்த நேரத்தில்தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால்ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல்நேரம்.
இந்த நேரத்தில்காலைக்கடன்களை முடிக்கவேண்டும். இதனால்மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின்நேரம்.
இந்த நேரத்தில்சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல்நேரம்.
வயிற்றில் விழும் உணவைச்செரிக்கச் செய்யும் நேரம். இந்தநேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது.
தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின்நேரம்.
இதய நோயாளிகள் கவனமாகஇருக்க வேண்டிய நேரம். சத்தமாகப்பேசுதல், படபடத்தல்,கோபப்படுதலை அறவே தவிர்க்கவேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல்நேரம்.
மிதமான சிற்றுண்டியுடன்ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்தநேரம்.

மாலை 5 முதல் 7வரை சிறுநீரகங்களின் நேரம்.
தியானம்,இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9வரை பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியன் என்பது இதயத்தைச்சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு.இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை -உச்சந்தலை முதல்அடிவயிறு வரை உள்ளமூன்று பாதைகள்
இணையும் நேரம்.
அமைதியாக உறங்கலாம்.இரவு 11 முதல் 1 வரை -பித்தப்பை நேரம். அவசியம் உறங்கவேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல்நேரம்.

ரத்தத்தை கல்லீரல்சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம்தூங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...