Skip to main content

படித்ததில் பிடித்தது..

எது நாகரீகம்...?

நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????

எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???

அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய
வளாத்த்தங்கலா???

எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???


எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????\


வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ....
நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் ....

" ஏன்டா படிச்சோம்னு இருக்கு ....
பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு, தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு , அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட
கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி , இந்த படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது............"

இப்படிக்கு

நான் யாருன்னு எனக்கே தெரியல

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...