ஆண்மகனானநான்உன்கழுத்தில்திருமாங்கல்யத்தைஅணிவிக்கும்இந்தநேரம்முதல்உன்னைபாதுகாக்கும்காவலனாகஇருப்பேன்இந்தமாங்கல்யத்தில்நான்போடும்முதல்முடிச்சிநீதெய்வத்திற்கும்மனசாட்சிக்கும்கட்டுப்பட்டவள்என்பதைகாட்டட்டும்இரண்டாவதுமுடிச்சிகுலபெருமையைநீபாதுகாப்பாய்என்பதைகாட்டட்டும்மூன்றாவதுமுடிச்சிகுலவாரிசுகளைமுன்னின்றுகாப்பவள்நீயென்றுகாட்டட்டும்என்பதாகும்.
பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும். இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.
Comments
Post a Comment