Skip to main content

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும்ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள்.
நம் ஊர்களில் பெரும்பாலானவர்கள்காதலில் தோல்வியுற்றால்தாடி வளர்ப்பார்கள். இருந்தாலும்இப்போதெல்லாம் நிறையப் பேர்ஸ்டைலுக்காகவே தாடி வளர்த்து வைத்திருக்கிறார்கள். தாடிகளில் மயங்கும் பெண்களும்உண்டு என்பது கூட உண்மை தான்!

இப்படி தாடி வளர்ப்பது உடல்ஆரோக்கியத்திற்கும்நல்லது என்று கூறப்படுகிறது.
இப்போது தாடி வளர்ப்பதால்கிடைக்கும் 7உடல் நல நன்மைகள் குறித்துப்
பார்ப்போமா...!


1 . சரும புற்றுநோயைத் தடுக்கும்சமீபத்திய ஆய்வின்படி,சூரியனிலிருந்து வரும்95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம்சருமத்தை நேரடியாகத்தாக்காதவாறு நம்தாடி பாதுகாக்கிறதாம். இதனால்தான் தாடி வைத்திருக்கும்ஆண்களுக்கு சரும
புற்றுநோயின் தாக்கம் குறைவாகஉள்ளதாம்.
2.ஆஸ்துமா, அலர்ஜிக்கு...

தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத்தடுப்பதில்அல்லது ஃபில்ட்டர் செய்வதில்
தாடியின் பங்கு முக்கியமானதாகஉள்ளது. இதனால் ஆஸ்துமாவையும்தவிர்க்க முடிகிறதாம்!

3. இளமையாக இருக்க...

தாடி வளர்த்திருப்பதால், சூரியனின்தாக்கம் மிகவும் குறைவாகஇருப்பதால்,தாடி இல்லாதவர்களை விட நீண்டஆண்டுகளுக்கு இளமையானதோற்றத்துடனே இருக்கலாமாம்.தாடி ஒரு வயோதிகத்தோற்றத்தை வேண்டுமானால்
கொடுக்கலாம்; ஆனால்,உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள்இளந்தாரிகள் தான்!

4. குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால்குளிரை அதிகம்தாங்கிக் கொள்ள முடியுமாம்.எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாகஉள்ளதோ, அந்தஅளவுக்கு அது குளிருக்கு இதமானதாகஇருக்குமாம்.


5. நோய்த் தொற்றுக்கள் குறைய...

பாக்டீரியா உள்ளிட்ட நோய்த்தொற்றுக்களைக்குறைப்பதற்கு தாடி மிகவும்உபயோகமாகஇருக்கிறது. சுத்தமாக ஷேவ்செய்திருப்பவர்களை இந்த நோய்த்
தொற்றுக்கள் எளிதாகத்தொற்றிக் கொள்ளுமாம்.

6. குறைகளில்லா சருமத்திற்கு...

ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக்காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக்
குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும்
தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!

7. இயற்கையான ஈரப்பதத்திற்கு...

தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம்என்ற பேச்சுக்கே இடமில்லை.
அது குளிர்ந்தகாற்றையே எப்போதும் தக்க வைத்துக்கொண்டிருப்பதால், சருமம்
பாதுகாக்கப்படுகிறது. இதனால்,தாடி இருந்தாலும் எப்போது முகம்ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்.

நீங்களும்
தாடி வளக்குறீங்களா பாஸ்???
என்ன ரீசன்…..?

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...